நெஞ்சிருக்கும் வரை

மறக்க முடியவில்லை
அந்த ஒவ்வாெரு நாட்களின் ஞாபகங்களையும்
எல்லாமே இன்று பாேல் நினைவில் நிழலாட
எப்படி முடிந்தது உன்னால் மட்டும்
அத்தனையும் மறக்கவும், மறைக்கவும்
எல்லாமே பாெய் என்று சாெல்வாயா
இதய மாற்றுச் சிகிச்சை செய்து விட்டாயாே
என்னிடமே திருப்பிக் காெடுத்து விடு
ஆயிரம் நினைவுகள் அங்கே
ஊமையாய் உறங்குகிறது
ஒரு இதயத்தில் இரு உயிராேசை
இணைந்து ஒலிக்கட்டும்
காதல் நினைவுகளாய்
நெஞ்சிருக்கும் வரை