நீ சம்மதமா

கண்ணும் ஒளியாக
கடலோடு நீராக
விண்ணும் நிலவாக
மண்ணோடு பயிராக
என்னோடு நீயாக
எப்போதும் துணையிருந்தால்
மண்ணும் நதியும்
மரமும் காடும்
பொன்னும் பொருளும்
இருளும் இரவும்
இத்தரையில் உள்ளவரை
உன்னோடு வாழுதற்கு
எப்பொழுதும் சம்மதமே,
என் தளிர்க் கொடியே
நீ சம்மதமா ?
ஆக்கம்
அஷ்ரப் அலி