கிடைத்த காதல்
உன் மனம் என்னிடம் வந்த பின் என் மனம்;
மேய்ப்பன் இல்லாத மந்தை ஆனது😊
பயமறியா இளங்கன்றாய் குதித்தாடுது😊
அணை கட்டா ஆறாக ஆர்ப்பரிக்குது😊
மதகு உடைத்த மடை நீராக பாய்ந்தோடுது😊
வானூர்திக்கும் உயரமாக என் மன ஊர்தி பறக்கிறது😊
தொலைபேசி, அலைபேசி இல்லாமல் எண்ண அலைகள்
உன்னிடம் பேசுகிறது😊
சரிகமபதநி தெரியாமலே சங்கீதம் தானே வருகிறது😊
கால்கள் ஜதியின்றி தாளம் தப்பாது நடனமாடுகிறது😊
வானோர் வாழும் சொர்க்கம் கீழே
என் காலடியில் கண்டது😊
துன்பம், நரகம் போன்ற சொற்களை
என் அகராதி மறந்தது😊
உலகின் அத்தனை மொழியிலும்
அன்பு, காதல் என்ற வார்த்தைகளை
தெளிவாய்த் தெரிந்து கொண்டது😊