முதுமொழிக் காஞ்சி 18

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
சொற்சோர்(வு) உடைமையின் எச்சோர்வும் அறிப. 8

- அறிவுப்பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

சொற்சோர்வு படச் சொல்லுதலான் அவனுடைய எல்லாச் சோர்வையும் அறிவர்.

ஒருவன் சொல்லும் சொல்லில் அறிவின்மை வெளிப்படுதலால், அவனுடைய அறிவின்மை மற்ற எல்லா விதங்களிலும் வெளிப்படும்.

சோர்வு - வழுவுதல். சொற்சோர்வு - சொல்லவேண்டுவதை மறப்பான் ஒழிதல்,

சொற்சோர்வு – அறிவின்மை;

ஒருவனிடத்தில் பலவித சோர்வுகள் உண்டு என்பதற்கு அவனுடைய சொற் சோர்வே அறிகுறி.

'சொற்சோர்வு படேல்' - ஒளவையார்.

'சொல்லுங்காற் சோர்வின்றிச் சொல்லுதன் மாண்பினிதே.' - இனியவை நாற்பது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Feb-18, 3:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

மேலே