தந்தைப் பாசம்---பாடல்---
உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் மெட்டில் :
பல்லவி :
கண்ணில் வெதச்சேன் காட்டில் பொதச்சேன்
தந்தையே பாச தந்தையே...
எண்ணி அழுதேன் நாளும் தொழுதேன்
தந்தையே பாச தந்தையே...
கண்ணில் வெதச்சேன் காட்டில் பொதச்சேன்
தந்தையே பாச தந்தையே...
எண்ணி அழுதேன் நாளும் தொழுதேன்
தந்தையே பாச தந்தையே...
அந்த ஆழி அலைபோல
எந்தன் ஆசையோ பிறக்கும்
நாளும் நீ உழைத்தே
தந்த நாட்களும் சிறக்கும்
நினைத்தால் தேன்......
கண்ணில் வெதச்சேன்......
சரணம் 1 :
வேசம் அற்ற அன்பில் பூக்கும் அந்தப் பாசம்
பஞ்சணையில் பூப்போல் நெஞ்சம் வந்து பேசும்
சிந்தும் மலைத்தேனின் விஞ்சும் சுவை ஆனாய்
துள்ளுமிள மானின் கொம்புகளும் ஆனாய்
கொஞ்சி சிரித்தே பேசி மகிழ்ந்தேன்
தந்தையே பாச தந்தையே
உன்னை இழந்தே நித்தம் மெலிந்தேன்
தந்தையே பாச தந்தையே
சுகம் கொடுத்தாய் அணைப்பில்
சுற்றி அணிந்தாய்க் கழுத்தில்
நீ தான்......
கண்ணில் வெதச்சேன்......
சரணம் 2 :
நெஞ்சமெனும் கூட்டில் நேசமெனும் மூச்சை
உள்ளிழுத்து வாழ்ந்தேன் சொந்தமென்ற வீட்டில்
என்னழகு வாழ்வில் என்றுமொளி வீசும்
உன்னழகு தேகம் வண்ண நிலவாகும்
கூடும் முகிலாய்க் கூடி களித்தேன்
தந்தையே பாச தந்தையே
தோட்டம் மலர்ந்தே வாட்டம் உணர்ந்தேன்
தந்தையே பாச தந்தையே
சுகம் கொடுத்தாய் அணைப்பில்
சுற்றி அணிந்தாய்க் கழுத்தில்
நீ தான்......
கண்ணில் வெதச்சேன்......