காதலிக்கு கடிதம்
நீ
செல்லுமிடம் நிதம் நின்று
பல சின்னஞ்சிறு பொய்கள் பேசி
உன் மனம் கவரப் பல
செயல்கள் புரிந்து
இருமனம் கூடி
திருமண நேரத்தில்
அற்பப் பணத்திற்கு ஏங்கி
அற்புதப் பெண்ணை விட்டு ஓடும்
சில மனமில்லா மாந்தரைப்போலே
நானும் செல்வேன் என்று நினைத்தாயோ ?
சொல்லடி காதலியே
உன் உயிர் முதல் மெய்வரைத்
தந்துவிட்டாய்
உன் வெண் கழுத்தைத் தாராயோ
நாம் உயிர்மெய் எழுத்தாய் வாழ்வதற்கே ..