கவிதை
எதுகை மோனை இலக்கணம்
... எதுவும் இல்லாப் படைப்பு
பதிவதைக் கவிதை படைப்பதாய்ப்
.....பலரும் சொல்லு கின்றார்
குதிரை என்று கழுதையைக்
....கூறுதல் குற்றம் அன்றோ ?
குதிரைக் கழுதை அல்லது
.....கழுதைக் குதிரை எனலாமே
கழுதையின் மதிப்பு குறைவெனக்
.....கருத்து சொல்லும் நோக்குடன்
எழுத வில்லை இதனை
.... இரண்டுமே பெருமை கொண்டவையே
கழுதையைக் குதிரை என்று
....கழறும் செயலால் கௌரவம்
கழுதை பெறுமென நினைக்கும்
....கருத்துதான் தவறெனச் சொல்கிறேன்