மழலையே

தவழ்ந்திடு மழகினில்
உவகையும் பெருகிடும்
கவலைகள் விலக்கிடும்
தவப்பயன் மழலையே !
நவின்றிடும் மொழியதும்
செவிகளி லினித்திடும்
தவிப்புகள் தணித்திடும்
கவின்சிலை மழலையே !
நதியினில் அலையென
மதிதனை மயக்கிடும்
புதியனப் புகட்டிடும்
அதிசயம் மழலையே !
( வஞ்சித் தாழிசை )
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
