நீரின்றி
சித்திரையில்
கத்திரியின் தாக்கம்!
மேகம் நீர் பொழியாதா?
மனதினிலே ஏக்கம்!
ஐப்பசியில் அப்படியே
தலைகீழ் திருப்பம்!
கார்முகிலின் கண்ணீர் நிற்காதா?
வீடு வந்த விருந்தாளியை
விரட்ட முடியா வருத்தம்!
ஏர் உழுத நிலங்களையும்...
ஏரியாக இருந்ததையும்...
கல் நட்டு விற்று விட்டோம்!
கட்டிடங்கள் கட்டி விட்டோம்!
நீர் சுண்டி போகையிலே
போரில் அதைத் தேடுகின்றோம்!
போரும் நீரால் நேரும்!
இதை எண்ண மறக்கின்றோம்...
மறுக்கின்றோம்!