சுற்றத்தைக் காப்போம்
வீட்டில் உள்ள குப்பைகளை
தீயில் இட்டார் அனைவருமே
ஏனென்று கேட்டால் போகியாம்....
ஒவ்வொரு வீட்டிலும்
இதுபோல் நடக்க..
ஒருவர் மட்டும் செய்தாரே அற்புதமான காரியத்தை....
தெருவில் உள்ள குப்பைகளை தீயில் இட்டார் அம்மனிதர்...
அவரவர் வேலைச் செய்வதற்கே
அழுத்துக் கொள்ளும் இந்நாளில்
ஆர்வத்தோடு சுற்றத்தை சுத்தம் செய்தார் அம்மனிதர்...
இவர்போல் யாவரும் இருந்தாலே தூய்மை இந்தியா நிச்சயமே!