குரல் இருந்தும் பாட முடியவில்லையே ஏன்

வைகறையில் 'கா'' 'கா' என்றுதான்
கரைந்து நம்மை துயிலின்று எழுப்பும் காகம்,
ஒரு நாள் நினைத்ததாம், குயிலைப் பார்த்து
நீயும் நானும் நிறத்தில் ஒன்று , உருவத்திலும்
சற்றேறக்குறைய ஒன்று, இருப்பினும் நீ
கரைந்தால் மட்டும் மனிதன் அதை
குயில் கூவல் என்கின்றான் அதை மேலும்
குயிலோசை, குயில் இசையே என்றெல்லாம்
விண்ணளவு மெச்சுகின்றான் .............இன்று நான்
விடப்போவதில்லை, உன்னைப்போல்
கூவப்போகின்றேனே, என்று சொல்லி விடாமல்
கரைய, தொண்டை அடைத்து போனதே
மிச்சம் .............கூவ முடியலையே .............
புரிந்து கொண்டது காகம் இப்போது
குரல் இருக்கு எல்லோருக்கும் ஆனால்
பாட குரல் மட்டும் சிலருக்கே உண்டு ..........

கோடானகோடி மக்கள் உண்டு உலகில்
எல்லோருக்கும் பேச குரல் தந்த இறைவன்
பாட ஒரு சிலருக்கே வரம் தந்தது எனக்கு
இப்போது புரிந்தது.......................'

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Feb-18, 9:03 am)
பார்வை : 139

மேலே