மனிதன்

தன் விஞான வளர்ச்சியை
எண்ணி எண்ணி கர்வம்
தலைக்கேற மனிதன்
வானை அண்ணாந்து பார்த்து
ஒரு ஏளன சிரிப்பு சிரித்து
சொல்லிக்கொண்டான்
தனக்கு தானே, " இறைவன்
என்பவன் வெறும் கற்பனையே
அவன் இல்லாததுவே உண்மை"
என்று சொல்லி வாயை மூடவில்லை
அவன் நின்றிருந்த இடம்
பிளவு பட்டது , கட்டிடம்
இடிந்து ஒரு நொடியில்
தரை மட்டமானது,பூமி அதிர்ந்து
ஓய்ந்தது ஒரு சில நொடியில்
அவனும் ஓய்ந்துபோனான்
சலனமில்லா பொதியாய்
மூலையில் ஒடிந்துபோன
கட்டிடத்தின் குவியலில் !
மனிதன் ஆணவம் அடங்கவில்லை
கொதித்தெழுந்தாள் பூமி
பூகம்பமாய்! .............
எங்கும் போர்க்கள கூக்குரல்
அழுகை, அவலம், மரண ஒலி............

மண் குலுங்கி குலுக்கி சற்று ஓய்ந்தது.
இதை தடுக்க முடியுமா
மனிதா .............இயற்கையின்
வானொலி எதிரொலிப்பதுபோல்
இருந்தது .................................

விஞானத்தில் இன்னும் முன்னேறு
மனிதா, அதில் நீ காண்பதெல்லாம்
இருந்ததை கண்டடெடுத்தவை .......
அவை என்றுமே எப்போதுமே
உன் படைப்புகள் அல்ல .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (8-Feb-18, 2:32 pm)
Tanglish : manithan
பார்வை : 101

மேலே