மூர்ச்சையற்ற பொழுதுகள் பகுதி 8

மூர்ச்சையற்ற பொழுதுகள் #௮
ஒருமுறை திரும்பி பார்த்தாலே அவளிடம் இதயத்தை பிய்த்தெறிந்து கொடுக்க வேண்டும் போலிருக்கும்.
அவளோ ஏழெட்டு முறை கண்களால் காதல் மின்சாரத்தை கடத்தி,
அவனின் இதய வால்வுகளை பஷ்பமாக்கி சென்று விட்டாள்.
இவ்வளவு நாளாய் தொலைந்து போயிருந்த நினைவுகளின் குரூர ஆக்கிரமிப்பின் பிடியில் அவனின் அன்றைய நாள் சிக்கி சின்னாபின்னமாக மாறி போனது...
பழைய நினைவுகளை மீண்டும் மீட்டி விட்டு சென்றாள்..
அன்று அறிவியல் பரீட்சை பேப்பர் வாசித்து கொடுத்து கொண்டுருந்தார் ஆசிரியர் ..
ஒவ்வொருவருடைய மார்க்கும் எவ்ளோ என்று ஆவலாய் இருக்க கார்த்திக் தொண்ணூற்று ஒன்பதும் மாலதி நுறு மார்க்கும் வந்தது...எப்படி நம்மை விட இந்த பாடத்துல அவ அதிக மார்க் எடுத்தாள் என்று நினைத்தவாரே அருகிலிருந்த உத்தமனிடம் அவள் பேப்பர வாங்கி தா எனக்கு என் பேப்பர் ல கொஞ்சம் குழப்பம் என் கேட்டான்..
அவனும் வாங்கி கொடுத்தான்..ஒவ்வொரு வினாவையும் பார்த்து கொண்டே வரும் போது தவறான விடைக்கு ஒரு மார்க் போட்டு இருப்பதை பார்த்து அந்த வாத்தியாரிடம் சொல்லி மார்க்கை குறைத்து வந்து உத்தமனிடம் கொடுத்தான்...
டேய் ஏன்டா இப்படி இதுக்கு நீயே அவ கிட்ட பேப்பர் வாங்கி இருக்கலாம் ல என்னை ஏன்டா கோர்த்து விட்ட என புலம்பியவாறு அவளிடம் பேப்பர் நீட்டினான் ...
அவள் முகம் கோபத்துல சிவந்து இருந்தது..
இதுக்குத்தான் வாங்கி கொடுத்தியாடா ..இப்படித்தான் அவன் வந்த புதுசுல என் ரேங்க் போச்சுது..இப்போ செண்டம் போச்சு..இனி யதாச்சு என்னிடம் கேளு அப்புறம் வைச்சுகிறேன் என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டாள்...
ஏய் பார்த்தியா நான் வேணும்னு செய்யலப்பா வேணும்னா என் ஒரு மார்க்க விட்டு தரேன் நீ வைச்சுகோ சரியாய் என சமாதான படுத்த முயன்றான் கார்த்திக் ..
மாலதியின் கோபம் இன்னும் விஸ்பரூபம் எடுத்து..அக்கினி கண்களால் எரிக்காத குறைதான்..இதையெல்லாம் இன்று அவள் மறந்திருப்பாளா இல்லை என்னையும் மறந்திருப்பாளா என்ற எண்ணம் என்னை நிகழ் காலத்துக்கு கூப்பிட்டு வந்தது..
டேய் எருமை எவ்ளோ நேரம் கண்ணாடி முன்னால மெய்மறந்து நிக்க.நான் ஸ்கூல் போக டைம் ஆகுதுடா ..இரு அப்பா கிட்ட சொல்லி கொடுக்கேன்..என்றவாறு சுபா திரும்ப எத்தனிக்க ,,கார்த்திக்கு நாம் இப்போ இன்னும் வீட்டுக்குள் தான் இருக்கோம் என்ற உண்மை புலப்பட்டது ..
மணி எட்டாகி கொண்டிருந்தது..
நில்லுடீ ஏய் லூசு நான் கிளம்புறேன்..நீ நல்லா கண்ணாடியை பார்த்து அத அழ வை ...
நீ என்னைக்காச்சு அண்ணன் கிட்ட ஹெல்ப் கு வரத்தான் போற அப்போ இருக்கு உனக்கு என பொருமிவிட்டு நகர்ந்தான்..
சரிதான் போடா இவரலாம் ஹெல்ப் பண்ணிட்டாலும் என முணுமுணுத்தவாறு வந்தாள்..
பேருந்து நிலையத்துக்கு வந்தான் அவள் தொலைவில் வருவது போல தெரிந்தது ..
அவளின் உருவம் கிளியோபாட்ரா போல அழகிய தீயாய் வந்து உள்ளூர கதகதப்பாக்கி சென்றது.
அவள் எல்லாவற்றிலும் எக்கச்சக்கமாய் அப்டேட் ஆகிருந்தாள்.
குறிப்பாய் பார்க்கும் அழகிலும் பேசும் அழகியலிலும்.
இந்த இரு வருட இடைவெளியில்.
அருகில் வர வர அவள் அழகு அவனை என்னன்னவோ செய்திருந்தது ...
நேற்று முழுவதும் அவளின் கற்பனைகளே இரவெல்லாம் கண்களை நிறைத்திருந்தது.
அவனோடு அவள் இருப்பதாய் நிஜமென்றே நம்பினான்.
அவனோட உலகம் சுவர்க்கத்தின் இரண்டாம் பாகமாய் பூமியிலே நிர்மாணிக்க பட்டிருந்ததாய் நினைத்தான் ..அங்கு வானமும் பூமியும் கண்ணாடி போல அவனின் முதல் காதலை பிரதிபலித்து கொண்டிருந்தது.
பட்டை தீட்டப்பட்ட வைர முட்களால் வேலியிடப்பட்ட பூந்தோட்டத்தில் தங்கத்தால் இழைத்த இரு ரோஜா மலர்களுக்கு காவலாய்,
உலகத்திலுள்ள அத்தனை தேனீக்களும் அல்லும் பகலும் தூங்காமல் விழித்திருந்து..
வானத்திற்க்கு கீழே ஒன்று திரண்ட கார்மேக கூட்டத்தில்,யாரோ கல்லெறிந்ததால் விழுந்த மழை துளிகள் அவர்களை அடைந்ததும் பன்னீராய் உருமாறி இருந்தது.
அந்தி சாயும் மாலை பொழுதில் வானம் முழுவதும் ஆயிரம் வானவில்கள் ஆங்காங்கு நின்று அவர்களை அதிசயமாய் ரசித்து கொண்டிருந்தது.
கனவிலிருந்து விடுபட்டு நினைவுகளுக்கு திரும்பினான் எதிரில் அவள் மிக அருகில் வந்து விட்டாள்...மனசெல்லாம் புது வித உணர்ச்சிகள் கொப்பளிக்க மெதுவாய் அவளை நோக்கி கை அசைத்தான்..
அவள் பார்த்தும் பார்த்ததும் போல அவனை கடந்து சென்றாள்...
இவ்ளோ நேரமும் அவனுக்குள் ஒளிர்ந்த காதல் தீயை யாரோ கனமழை பொழியவிட்டு அணைத்தது போல இருந்தது ...
ஏய் மாலதி என சப்தமிட்டு உரக்க கத்தியது அவனுக்கே கேட்டது போல தெரியவில்லை ...
அவள் கூந்தலில் இருந்த இரண்டு சிகப்பு ரோஜாக்களில் ஒரு ரோஜா தரையில் விழுந்து அவனை அவளுக்கு பதிலாய் பார்த்து சிரித்தது ...
கையில் வைத்திருந்த காதல் பூக்கள் மலர் மாலையாக மாறுமா?
இல்லை மலர் வளையமாக போகுமா?
பூக்களுக்குள் அடுத்தடுத்து பூகம்பங்கள் வெடிக்கும்..
தொ_ட_ரு_ம்..