துறவியா

எதைத் துறந்தாய் துறவியே?

நீ துறந்தது மானுடநேயம்
மனம் முழுக்க வக்ரம்.

உன் அழுக்கு நாவால்
ஆண்டாளை உச்சரிக்காதே.
ஊருக்கு உபதேசிக்காதே.

நன்முறை பேணவேண்டிய - நீ
வன்முறை தூண்டுகிறாய்.

காயங்களுக்கு மருந்திட வேண்டிய – நீ
காயப்படுத்துகிறாய்.

உன், உண்ணா விரதத்தை
ஆண்டாளே ஏற்க மாட்டாள்.

பீடத்தைக் கொச்சைப்படுத்திவிட்டாய்.

உன், தீட்டுப்பட்ட நாக்கை
எந்த நீராலும் கழுவ முடியாது.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (9-Feb-18, 9:31 pm)
பார்வை : 81

மேலே