எண் களிலே என் வாழ்க்கை

“எண்” களிலே என் வாழ்க்கை
யாருடனும் சண்டையிட
தயாரில்லை
என் உரிமை என்று
கூட சொல்லவில்லை
“எண்களிலே” என் வாழ்க்கை
நுழைந்து விட்ட காலம்
என்னை அடையாளம் காட்ட
ஆதார் “எண்”
பான் “எண்”
கைபேசி எண்
வங்கி சேமிப்பு “எண்”
கிரிடிட் அட்டை “எண்”
டெபிட் அட்டை “எண்”
வீட்டுவரி,தண்ணீர் வரி, “எண்”
தொழில் வரி,வருமான வரி “எண்”
இன்னும் எத்தனை “எண்”களோ ?
பெயர் சொல்லி வாழ்ந்த
காலம் போய்
“எண்” சொல்லி
வாழ்க்கை வந்து விட்டது
இனி வரும் காலம் ?
யாருடனும் சண்டையிட
தயாராயில்லை
“எண்” களிலே என்
வாழ்க்கை சுருண்டு விட்டது