ஏங்கி ஏங்கி
குட்டு வாங்கி வாங்கியே
குனிந்த தலை...
திட்டு வாங்கி வாங்கியே
தளர்ந்த மனது.....
அவமானப்பட்டு அவமானப்பட்டே
அலைபாயும் சிந்தை...
அன்புக்கும்,
பாசத்திற்கும், நட்பிற்கும் ,
அமைதிக்கும், பண்பிற்கும் ஏங்கி
நிம்மதியில்லாத
சுற்றுச் சூழலில் சிக்கி தவிக்கும் மனதிற்கு
ஆறுதல் ஏது??