முகம்பொத்தி

வார்த்தைகள்
ரத்தம் சிந்துகின்றன;
உங்கள் நாவின்
வெட்டுப்பட்டு.

மௌனம் கிழிபடும் ஓசை
நாராசமாய் இருக்கிறது.

நிசப்த ஒழுங்கின் அமைதி
தியானத்தை விட மேலானது.

அர்த்த கர்ப்பங்கள்
கலையும் வேதனையைத்
தாங்க முடியவில்லை.

ஒளியாய்
சுடர வேண்டியது
கருகும் வாசனையில்
முகம்பொத்திக் கிடக்கிறேன்.

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (10-Feb-18, 6:54 pm)
பார்வை : 65

மேலே