கூவமும் தேம்ஸ் நதியாகும் நேரம்

எங்கள் வாழ்வே
எங்கள் வளமே
எங்கள் கூவமே
மின்னி மிலிர்ந்த நதியே
நவரத்தினங்களும் தோற்றுப்போகுமே
உமது அழகினிலே.
தேனினும் தித்தித்திப்பு ஊட்டிடுமே உம்மை அருந்தையிலே
குழந்தாயாய் தவழ்ந்தாய்
நதியாய் பிறந்தாய்
உம் இணையோடு சேருகையிலே
சாக்கடையாய் போனாயே
எல்லாம் மனிதன் பேராசையிலே
எங்கள் கூவமே
இயற்கையின் திகட்டா கொடையே
மீண்டும் எங்கள் அன்னை அளித்த அழுகு இளவரிசையாய் உலா வரும் காலம் எப்போதோ ?
கூவ நதியே
நீயும் தேம்ஸ் நதி போல் கர்வத்தோடு ஓடோடி வரும் நேரம் எந்நேரமோ ?
எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றோம்
நதியே ....
மீண்டும் சிம்மாசனமிட்டு
அரும் ரத்தினமாய்
மிலிர்ந்திடும் தாரகையாய் அனைவரும் அதிசயக்கும் அரும் நதியாய் வருவாய் எங்கள் நதியே
எங்கள் கூவமே

எழுதியவர் : பிரகதி (10-Feb-18, 6:25 pm)
பார்வை : 424

மேலே