சோலைப்பூக்கள்

சாலை ஓரம் சோலை வேண்டி மரம்
நட்டார் அஹிம்சை அசோகர்🌴🌳🌲
சேலைதோறும் பூஞ்சோலைபடைத்து
ஹிம்சை செய்திட்டான் பிரம்மன்🙉
வாலைக் குமரி'கள்' வாயமுதம் தேனினும் இனியதாயிருக்க, அது
பாலைநிலத்தில் தீரா தாகத்தில் நீர்
கண்டவன் போலாகினேன்😊
பாலைக் கண்டதும் பாத்திரம் விட்டகலாப் பூனை யாகினேன்😿
வேலையென்பதே உனைச் சுற்றுவது
எனும் சூத்திரம் மறக்க யானைபலம்
தேடினேன்🐂
சேனை பல வென்றாலும், உன் அழகு
ஊனை வெல்லும் வழி தெரியவில்லை🐂

எழுதியவர் : பாலமுருகன் பாபு (10-Feb-18, 8:49 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 86

மேலே