காதல் போர்

விரட்டி விரட்டி உன்னை காதலித்தேன்💓
சுருட்டி கசக்கிய காகிதமாய் எனை வீசி எறிந்தாய்💔
நேசத்துரட்டி கொண்டு உன் மன மலர்
கொய்ய வந்தேன்💖
புரட்டி எடுத்த புயலாக என் மனம் சிதைத்து விட்டாய்😥
மிரட்டி உருட்டி பணிய வைத்து வந்திடுமா காதல்?💘
திரட்டி கொடுத்தேன் என் அன்பையெல்லாம் உனக்குயிராய்💓
தாலாட்டி சீராட்டி உன் காதல் தருவாயா?💕
இல்லை, கடைசி கால தேரேற்றி எனைஅனுப்பி விடுவாயா?💞

எழுதியவர் : பாலமுருகன் பாபு (10-Feb-18, 9:01 pm)
Tanglish : kaadhal por
பார்வை : 246

மேலே