அமைதியும் ஒரு அழகு

அமைதி
நிம்மதி போன்று இதுவும்
அவ்வளவு எளிதாக
மனிதனுக்கு
பிடிப்படுவதில்லை
அமைதி அமைவதெல்லாம்
அவரவர் பெற்ற வரம்

அமைதி
சில நேரங்களில் வரம்
சில நேரங்களில் சாபம்
காதலுக்கு பின்னும் அமைதி
காதலுக்கு முன்னும் அமைதி
காதலும் ஒரு புயல்

தூக்கமும் ஒரு அமைதி
சிலருக்கு இந்த அமைதியைகூட
மாத்திரைப்போட்டு தான்
வாங்கவேண்டியுள்ளது

பூக்களின்
அதிசயத்தை பாருங்கள்
அவைகள் ஒரே சமயத்தில்
இரு வேறு வேலைகளை
செய்கிறது
வாசம் வீசிக்கொண்டே
புன்னகை புரிகிறது
இதுவும் ஒரு அமைதியே

அமைதி
மௌனமல்ல
அமைதி
பேசத்தெரிந்த ஊமை
கேட்க தெரிந்த செவிடு
பார்க்க தெரிந்த குருடு
கண்டும் காணாமல்
இருக்கும் சுயநலம்

அமைதி அனைத்தையும்
அறிந்துக்கொண்டு
வெளிக்காட்டாத ஒரு ஞானம்
அமைதி கோழையல்ல
புலி பதுங்குவதைப்போல்
சிலருக்கு
அமைதியும் ஒரு வீரத்தின்
அடையாளம்

அமைதியாக
வென்றவர்களும் உண்டு
ஆர்பரித்து
தோற்றவர்களும் உண்டு
அமைதி
ஆண்டவனும் வேண்டிடும்
ஒரு உன்னத நிலை

பெண்ணுக்கு
அமைதி ஒரு அணிகலன்
அமைதி உள்ள
இடத்திலெல்லாம்
புன்னகையும்
சேர்ந்துக்கொள்ளும்
புன்னகை பெண்ணிற்கு
அக அழகு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (12-Feb-18, 8:40 am)
பார்வை : 1934
மேலே