நானுமினி தேவதாஸ்

என் காதல் ஏற்காமல் நீ சொன்ன ஒற்றை சொல்
ஆயிரம் ஊசிகளை என் நெஞ்சில்
ஒருசேர சொருகியது போல் துடித்தேன்😢
நீச்சல் தெரியாதவன் கிணற்றில் விழுந்து மூச்சு திணறியது போலத் தத்தளித்தேன்😢
நீருக்குள் எரியும் தோட்டா
நெருப்பு சுற்றிய மீன்கள்
சிதறியது போல என் மனம்
சிதிலமானது😢
சித்திரை மாதம் உச்சி வெயிலில் மின் இணைப்பு
இல்லா வீட்டில் அடைத்து வைத்தது போல்திணறினேன்🐆
பலநூறு அட்டை பூச்சிகள்
என் தலைபுகுந்து என் மூளையை உறிஞ்சி விட்டது
போல் உன்மத்தன் ஆனேன்!
என் வாழ்நாள் கடத்த நான்
செய்ய வேண்டியது என்ன?😢

எழுதியவர் : பாலமுருகன் பாபு (12-Feb-18, 3:17 pm)
பார்வை : 160

மேலே