மல்லிகை அவள்
மல்லிகைப்பூ என் மனதிற்கினிய பூ
சின்னஞ்சிறு பூ அது
ஆனால் பார்வைக்கு
அழகின் உயிரோட்டம்
தொட்டால் மென்மை
மயக்கும் அதன் வாசம்
வாடியபின்னும் நீங்காதிருக்கும்
என்னவளே நீ எந்தன் மல்லிகைப்பூ
வாடா மல்லிகைப்பூ
என்றும் மனதில் இளமைப்பொங்கும்
உன்னதப்பூ இறைவன் எனக்களித்த
மல்லிகை அல்லவோ நீ ,மல்லிகையே
மல்லிகை என் மனதிற்கினிய பூ
உன் பெயர் மல்லிகை
நீ என்றும் எந்தன் மல்லிகை.
ஆண்டுகள் உருண்டோடி
நமக்கு மூப்பு தரலாம்
அது தாக்குவது வெறும்
நம் வெளி தோற்றத்தை
மனதில் இளமை கொண்டுள்ளோம்
என் மனதில் என்றும் எழில் பொங்கும்
மல்லிகை நீ , வாசமிகு மல்லிகை
வாடா என் மல்லிகை
இன்று இந்த இனிய தினம்
உலகெங்கும் 'காதலர் தினம்'
இந்த உன் காதலன் உனக்கு
உவந்தளிக்கும் கவிதைப்பூ
இதை ஏற்றுக்கொள்வாய் நீ
என்னுயிர்க் காதலியே மல்லிகையே