அவன் தந்த முத்தங்கள்

அவன் தந்த முத்தங்கள்
அவன் வரவை வழிமேல்
விழிவைத்து காத்து காத்து
பூத்துப்போன என் கண்களுக்கு
புது ஒளி தந்து ஒளிபடைத்த
கண்களாக்கி மிளிரவைத்தன
என் கண்களின்மேல் அவன் தந்த முத்தங்கள்

உரிமையோடு அவன் என்னை
இறுகப்பற்றி தந்த முத்தங்கள்
நாவினால் அவன் வரைந்த
காதல் கவிதைப்போல்என் மனதில்
வந்து கவி பாடியது

இன்னும் இப்படி என் மனதை
கிரங்கவைத்த அவன் முத்தங்கள்
அதைப்பற்றி சொல்ல வெட்கம்தான்
மிக வந்து என் தொண்டையை அடைக்கிறது

இப்படி முத்தங்களால் என்னை
முத்தாரம் கொண்டு அணைத்தான்
என்னவன் இன்று 'காதலர் தின பரிசாக'
இது போதும் இந்த மண்ணில் இன்று
சொர்கம் காண ,வேறு பொன்னும்
பொன்னும் பொருளும் வேண்டேன் நான்

இதில் அத்துமீறல் ஏதும் இல்லையே
காதலருக்கு 'காமத்து பாலில்'
இதற்கு அங்கீகாரமுண்டு.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Feb-18, 3:24 pm)
பார்வை : 161

மேலே