காதல் தினம்
உன் நினைவில் வாடுகின்றேன்
நீ வருவாய் என்ற எண்ணம்
இன்னும் என் மனதில் -வந்திடுவாய்
மன்னவனே , சேர்ந்திடுவாய் இன்று
காதல் தினம் இன்று காதலர்
நாம் கூடிடலாம் -இன்னும் என்னை
காத்திட வைக்காதே இன்று
காதலை வெறும் 'வினைச்சொல்'ஆக்கிவிடாதே