நம் தாய்த்திருநாடு
ஆறடி நிலத்திற்குள் அடைபடும்
மனிதனோட நீ
ஏன் இன்று பணம் என்னும்
மோகத்திற்கு அடிமையாய் ஆனாய் நீ !
கல்லுடைத்து வாழும் மனிதற்கெல்லாம்
மனம் இளகிய தன்மை உடையதாய்
இருப்பதனால் தான் கல்லை உடைத்து
வேலை செய்கிறான்.
நாயாய் வேலை செய்பவர்க்கெல்லாம்
கூலி என்னவோ வெறும் 400 மட்டுமல்லவா
ஆனால் சொகுசு வேலை செய்பவர்க்கெல்லாம்
ஏன் இந்த லச்சக்கணக்கில் பணம்
செய்த வேலைக்கு கூலி கிடைப்பதில்லை
அதனால் கூல் குடித்து உழைக்கிறான்
ஏழை மனிதன் !
அன்றாடம் உணவிற்கு அல்லல்படும் ஏழைகள்
உழைத்து உழைத்து தேய்ந்த கைகள்
ஒண்டி வாழ வீடு கூட இப்போது
இல்லாத நிலைமை தான் தம் தாய் திருநாட்டில் .
வீதியில் படுத்துறங்கும் நிலைமை தான் இப்போது
இந்த நிலைமை மாறுவது எப்போது
தம் தாய் திருநாட்டில்
கட்சிகள் பல வருகின்றன
மக்களுக்கு செய்கின்றேன் என்கிறார்கள் அரசியல்வாதிகள்
ஆனால் நம்முடைய மக்களை
500 1000 க்கு அடிமையாக்கி
குடிஉரிமையே கேவலப்படுத்துகிறார்கள் இந்த நாட்டில்
ஓடி ஆடி விளையாடிய காலம் போய்
இப்போது கம்ப்யூட்டர் மயமாகி
மாறி போச்சு குழந்தைகளுக்கு
அரசாங்க அதிகாரிகளுக்கு மரியாதை கொடுக்கும் மக்கள்
ஏழை விவசாயிகளுக்கு மரியாதை கொடுப்பதில்லை ஏன் !
தமிழ்நாட்டில் பிறந்த பிள்ளைகளுக்கு
தமிழ்மொழி மறந்து
அந்நிய மொழியை திணித்து
தமிழை மறக்கவிடடார்கள் இந்த மக்கள்
அகத்தியர் காலத்தில் தமிழ் வளர்த்த நிலைமை மாறி
இன்று நம் தமிழ் திருநாட்டில்
அந்நிய மொழியை வளர்க்கிறார்கள்
சிடடையே பறந்து திரியும் இந்த பச்சிளம் குழந்தைகளை
தனியார் பள்ளிகளில் 4 வயதிலேயே
போய் அந்த சிறை என்னும் கூய்ண்டில்
போய் தள்ளுகிறார்கள் இந்த மக்கள்.
கல்வியை கற்று கொடுக்கும் ஆசிரியர்களுக்கு
மரியாதை அளிக்காமல்
லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளுக்கு
நம் மக்கள் பாலாபிஷேகமும் புஷைகளும் செய்கிறார்கள்
இந்த நிலைமை மாற்றும் மனிதன்
அவன் யார் !
,