எத்தனை காதலார் தினம் வந்தாலும்

எத்தனை காதலார் தினம்
வந்தாலும்
அந்த முதல் சந்திப்பில் ஏற்பட்ட
ஒர் உணர்வு
உடல் உள்ளம் உயிர்
அனைத்திலும் கலந்த காதல்
அன்று மட்டும் தான் .....
வாய் மொழியும் வழி தெரியாமல் இருக்கும்
இருவிழியும் இமை மூட வேண்டும்
கண்களில் கடிதங்கள் கற்பிக்கும்
கன்னங்கள் காட்சிபடுத்தும்
கை விரல்கள் கானம் கணக்கும்
தான் செய்யும் வேலையை கூட மறக்கும் ...
அந்த தருணம் வாழ்வின்
மிகவும் அழகானவை .....

எழுதியவர் : சண்முகவேல் (13-Feb-18, 8:30 pm)
பார்வை : 812

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே