உன் தாள் பணிகிறேன்

சிலம்பின் வீரத்தில்
வீர மேகலை
தூவிய வீரம்!!

கம்பன் கட்டுத்தறிக்கும்
கவி பாடச் செய்தவள்!

மேல்,கீழ் கணக்குகளில்
அறம், புறம் ஓதியவள்!
உயிர்நெறி ஊட்டியவள்!

பாரதி புதுமை
தாசன் எழுச்சி
ஒருசேரப் பெற்றவள்!

ஈரடிக் குறளில்
வாழ்க்கைநெறி
போதித்தவள்!

அன்புக்கு தனி
அகராதி சேர்த்தவள்!

என்னையும் கவி பாடச்
செய்த அன்னையே
உன் தாள் பணிகிறேன்!

- மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (14-Feb-18, 3:07 pm)
Tanglish : un THAAL panikiren
பார்வை : 1231

மேலே