நடந்த சம்பவம் - 12 02 2018

அன்றைய மதியபொழுதில் என் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அடையாறில் உள்ள என் மகன் பள்ளிக்கு விரைந்தேன் .மணி பகல் பொழுது சரியாக இரண்டை தாண்டியது ,பள்ளி மணி அடித்தவுடன் பறக்கும் பறவைகளாக மாணவ /மாணவிகள் விரைந்து வீடு செல்ல முந்திய வேளையில்

நானும் என் இரண்டாம் வகுப்பு படிக்கும் மகனை அழைத்துக்கொண்டு வாகனங்கள் நிறுத்திய இடத்திற்கு வந்தேன் .அந்நேரம் என் மகனுக்கு சிறுநீர் கழிக்கும் எண்ணம் பிறக்க நானும் போய் அந்த
மைதானத்தின் ஓரத்தில் கழித்துவிட்டு வா என்று சொல்லி விட்டு என் வாகனத்திலேயே அமர்ந்து கொண்டேன்
வார்த்தைகள் சொல்லி முடிப்பதற்குள் அந்த சறுக்கு வழியில் குறுக்காக வேகமாய் ஒரு மாணவன் தனது சைக்கிளில் வர செய்வதறியாது சில கூக்குரல்கள் மட்டும் ஹேய்ய்யய்யய் என்றது .

பார்க்கிறேன். எனது மகன் முதுகில் சைக்கிளின் முன் சக்கரம் இடித்து இழுத்துக்கொண்டு போய்
ஒரு குட்டிக்கரணம் போட்டவாறு புரண்டு விழுந்து அழ ஆரம்பிக்கும் முன்னே நான் சுதாரித்துக்கொண்டு மகனை தூக்கியணைத்து எந்தஎந்த இடங்களில் எல்லாம் அடிபட்டு இருக்கிறது என்பதை ,அறிந்து பார்க்க
அவனின் இடது கண் ,கன்னம் ,கால் முட்டிகளில் எல்லாம் கீறல்களும் ரத்த கசிவுகளையும் கண்ட உடன்
மனது இறுக பாரமானது .செய்வதறியாது திகைத்து கொதித்து போனது உள்ளம் .

சிறு நிகழ்வாகி இருக்கணும் சைக்கிளின் வேகம் தான்
சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டது .சைக்கிளில் வந்த அந்த மாணவன் விழுந்து எழுந்து என் முன்னே வந்து
நிற்கிறான் .நான் என் மகனை தோல்சாய்த்துக்கொண்டு ,சைக்கிள் மாணவனின் காயங்களை கேட்டறிந்து
சில அறிவுரைகளை வழங்கி போஎன்றேன், அவனோ போகாமல் செய்வதறியாது திகைத்து பயந்து என் முன்னே நின்று கொண்டிருந்தான் .

அமைதி ததும்ப அந்த மாணவனை நீ போய் உன் காயங்களுக்கு முதலில் கட்டு போடு இனி சைக்கிளில்
வேகம் செல்லாதே அப்படியே சென்றாலும் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்தும் விவேகம் தெரிந்துகொள் என்றேன் ,அவனும் சென்று விட்டான் .நானும் எனது மகனை அழைத்துக்கொண்டு வீடு வரும் வரை சரி தவறுகளை சுட்டிக்காட்டி வீட்டுக்குள் வந்தவுடன் அவனுக்கு முதலுதவி சிகைச்சைகளை தந்து ஓய்வெடுக்க செய்தோம் மறுநாளும் அவனை பள்ளிக்கு அனுப்ப மனமில்லாமல் ஒரு நாள் விடுப்பு எடுத்து மேலும் ஓய்வெடுக்க செய்தோம் .

என்னதான் பார்த்து பார்த்து கவனமுடன் நாமிருந்தாலும் கவனமில்லாமல் வேறொருவரிடம் அடியோ,திட்டோ .
திகைப்போ ,வாக்குவாதமோ என அன்றாடம் இதில் எதுவேணுமென்றாலும் நிகழலாம் .
நம்மைப்போல உலகமும் நமக்கு ஏற்றதாக இல்லை என்பது தான் உண்மை .

பள்ளிகளில் ஒழுக்கம் சார்ந்த பாடத்திட்டங்களை முதன்மை படுத்தினால்
வேகங்கள் விவேகமாகும் ,தீமைகள் நன்மைகளாகும் .எல்லோரும் ஓர் நிலையடைவார் .

கனமான விபத்தை கலைக்கும் எண்ணத்தில் எழுத்தில் பதிவிடுகிறேன் .

எழுதியவர் : சி .எம் .ஜேசு பிரகாஷ் (14-Feb-18, 8:10 pm)
பார்வை : 87

சிறந்த கட்டுரைகள்

மேலே