ஆழ்தல்

#ஆழ்தல்#

நான் அதனுடன் பேசிக்கொண்டிருந்தேன்,
உடனே அந்த மரம் தன் கிளைகளையாட்டி
நீர்த்திவலைகளைத் தெளித்துரைத்தது,

சிறிதுகாலம் கழித்து
நீ என்னுடன் பேசுகையில்
நானுனக்கு எதையும் தர முடியாது என- உணர்வின் தீட்சண்யம் விளங்கிக்கொண்டேன்,

காலம் - அது மட்டுமே
நிர்ணயிக்கட்டும் என் நிதர்சனத்தை, அதுவிடையில் நீங்கள்
என்னியத்தை எப்படியானலும் பிரகடனப்படுத்திக் கொள்ளுங்கள்,

இப்பொழுது சொட்சமாய்
சில ஆனந்தக் குமிழ்கள் எனக்குள் தவழ்கிறது
அது எப்பொழுதும்
உடைவதேயில்லை - நம்பிக்கையின் துணையல் அது,

ஓ! நீங்கள் அடுத்ததோர்
அவியலைப் பிதற்றத்
தயாராகுங்கள்,
நான் மரத்தினுள்
மீண்டும் ஆழ்கிறேன்.

எழுதியவர் : சக்தி கேஷ். (15-Feb-18, 1:09 am)
சேர்த்தது : சக்தி கேஷ்
Tanglish : aazhathal
பார்வை : 93

மேலே