என் கற்பு

#என் கற்பு#

என்றும்போல் பேய்க்கனவாய் இருந்துவிடவில்லை
இந்தக்கடைசி இரவு,

நல்ல உறக்கத்தின் இடையில்
இச்...இச்... சத்தம்
பல்லிதான் என்றறியும் தூங்காமலிருக்கும் சில மூளைக்காதுகளுக்கு

ஏதோ கடிக்கிறது
கொசுதான் என்றறியும்
பழக்கப்பட்டத் தோல்நுனிக்கு,

உடலெல்லாம் கூச்சம்,
ஓ மழைக்காலமெனக் கேளிக்கும் மனநாட்டம்

தீடீர் முனகல்,
ஓ பகலிலே யாருடனாவது
பேசுகையிலே உளருவவோம்
இப்போ சொல்லவா வேணும்
பாணியில்
தூக்கமனம்

சற்று பேரமைதி
விழிப்புச்சுப்பன் எழுடா நாயே
என்பது போல்
ஆரேழு தடவைக் கத்திவிட்டான்,
எப்பா இந்த
அலாரம் மாத்தி வெச்சியே பாதி தூக்கம் போயிடுதுப்பா என
ஏதோ தொலைக்காட்சியினுள்
சூழ்நிலை நகைச்சுவை

தலையனையில் எச்சில்
தனது 'ஜொல்லு'
அவதாரத்தில் ,
சரி இதுக்கும் மேல தூங்குனா
காத்தால சோறு
கிடக்காது என
வாயைப் பிளந்து கைகள்
சோம்பல் முறித்தெழுந்தால் - ஒரு அதிர்ச்சி

உடம்பெல்லாம் அரைவட்ட சிவப்புப்பதிவு முத்திரைகள்
ஐயோ எனக்கோ பயம்,

ஐயோ போச்சா சோனமுத்தா
'25 வருசமா கட்டிக்காப்பாத்தி வந்த கற்பு போச்சே'னு
பகீரென மனது துடிக்க

என் அன்னையின்
எனக்கானக் காலைத் துதியில் ஒரு சிறுமாற்றம் " ஏன் நாயே, ராத்திரி பூரா இந்த பீட்ரூட் செதுக்கிய குப்பையிலயா தூங்குன"

ஓ 'யப்பா சாமி நல்லவேளை இதுதானே' (நமக்காவது ......) எனும் சற்றே விரக்தி தெளிக்கப்பட்ட
நிம்மதிப் பெருமூச்சுடன்

கற்பைப்பத்திரமாகவும் கேனைச்சிரிப்பைப்
பாத்திரமாகவும்
பார்த்துக் கொண்டு,
கழிப்பறைக்குப் படைப் பெயர்ந்தேன்
பற்பசையைத்தேடி.

எழுதியவர் : சக்தி கேஷ். (15-Feb-18, 1:12 am)
சேர்த்தது : சக்தி கேஷ்
பார்வை : 105

மேலே