என்னவளே என்னவளே
என்னவளே
உன் பாதங்களை
பாதுகாக்கும் பாதரட்சையை
உன் அழகுக்கு அழகு சேர்க்கும் அழகான உடைகளை
உன் மெல்லிய இதழில்
ஒட்டியிருக்கும் சாயத்தை
உன் கைகளிலும் கன்னத்திலும்
உறவாடும் கைப்பேசியை
பார்க்கும் போதெல்லாம்
அவைகளின் மீது எனக்கு
கோப கோபமாக வருகிறது
எனக்கு சொந்தமான
அங்கங்களை முதலில்
அவைகள் பார்த்து
அனுபவிக்கிறதே....
என்ற கோபம் தான்.