கடவுள்

யாரோ தூக்கி வீசிப்போன
ஓர் இரவு வாழ்க்கை ,
பஞ்ச பூதங்களும்
எஞ்சிய மரணமும் சொல்லும்
பயம் மிளிரும் கதைக்கொத்து ,
அவற்றில் எதில்
மயங்கித்தூங்குவோம் என்று
தெரியாமல்
கொட்டக் கொட்ட விழித்துக்கொண்டிருக்கும்
மனிதக்குழந்தை ,
கையில் கைப்பொம்மையாய்
ஒரு கடவுள் .

எழுதியவர் : இம்மானுவேல் (5-Aug-11, 6:48 am)
சேர்த்தது : Immanuvel
Tanglish : kadavul
பார்வை : 328

சிறந்த கவிதைகள்

மேலே