வீட்டு அமைதியாக இருந்தால் நாடு அமைதியாக இருக்கும் என்ற திரு கென்னடி அவர்களின் கூற்று நம் நாட்டோடு எந்த வகையில் தொடர்புடையது என்று விவரிக்க
வீட்டு அமைதியாக இருந்தால் நாடு அமைதியாக இருக்கும் என்ற திரு கென்னடி அவர்களின் கூற்று நம் நாட்டோடு எந்த வகையில் தொடர்புடையது என்று விவரிக்க.
நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பது பழமொழி. ஒரு குடும்பம் பிரச்சினைகளின்றி அமைதியாக இருந்தால்தான் நாடு பூசலின்றி இருக்கும். சிறிய பிரச்சினைகளே காட்டுத்தீயைப் போல பரவி பூகம்பம் போல் வெடிப்பதற்கு காரணமாக அமையலாம். எனவே, வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் என்றென்றும் ஒற்றுமையுடனும் நற்பண்புகள் நிறைந்து செழிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் சேர்ந்தே ஒரு நாட்டின் அஸ்திவாரத்திற்கு வழி வகுக்கிறது. ஒரு வீடே சீர்குலைந்த நிலையில் இருக்குமாயின் நாடு மட்டும் எம்மாத்திரம். ஆகையால், திரு. கென்னடி கூறிய கூற்று எவ்வகையில் தொடர்புடையதாக நம் நாட்டோடு இருக்கிறது என்பதைக் காண்போம்.
ஒரு வீடு சாந்தியுடன் இருக்க குடும்பத்தினரிடம் ஒற்றுமை நிலைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் ஒருவருக்கொருவர் தோள் கொடுத்து உதவ வேண்டும். தத்தம் பணிகளை மட்மே செய்யும் சுயநலப்போக்குடன் செயல்பட்டால் அம்மானிடரால் குடும்பத்திற்கே கேடு. ‘தனி மரம் தோப்பாகாது’ என்று உணர்ந்து நடக்க வேண்டும். நம் இன்ப துன்பங்களைப் பங்கிட்டு அனைவரும் ஒன்றாய் உயர்ந்திட முனைய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒற்றுமைகள் உண்டாகும்போது, வேற்றுமைகளுக்கு அங்கு வேலைநில்லை. ஒரே நோக்கத்துடன், உதவும் மனப்பான்மையும் நடந்திட மக்கள் முயல்வர். இவ்வாறு, அனைத்து குடும்பமும் இருந்தால், சிங்கை திருநாட்டில் வேற்றுமைகளே இருக்காது. உலக வரைப்படத்தில் சிறு புள்ளியாக இருந்த நம் நாட்டை உலகம் போற்று பெறும் புள்ளியாக மாற்றியது நம்மிடம் இருந்த ஒற்றுமையே. சிங்கையை உயர்த்திட உலக பார்வையில் நிலைத்திட வேண்டும் என்ற ஒரே உணர்வுதான். அவ்வுணர்வே நம் நாட்டு மக்களுடனும் அவ்வாறே செய்வோம். இனம், மதம், மொழி என்ற பாகுபாடுகளின்றி, நம்முடைய நாட்டிற்காக அரும்பாடுபட தயாராக இருப்போம். நம் மக்கள் சுயநலவாதியாக இருந்தால், நம் நாட்டிற்கு முட்டுக்கட்டையாக அவர்கள் விளங்குவர். எனவே, வீட்டில் ஒற்றுமை இருந்தால், அமைதி உண்டாகும். அதே உணர்வோடு மக்கள் செயல்பட்டால், நாட்டில் அமைதி நிலவும்.