முதுமொழிக் காஞ்சி 29

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
வறியோன் வள்ளியன் அன்மை பழியார். 9 பழியாப்பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

வறுமை யுடையானை வண்மையுடையான் அல்லனென்று பழியார்.

பதவுரை:

வறியோன் - பொருளில்லாதவனது, வள்ளியன் அன்மை - ஈகையில்லாமையை,
பழியார் – எவரும் பழித்துரையார்.

பொருளுடையவன் பொருளில்லார்க்கு ஈயாமையை எல்லாரும் பழிப்பர்: பொருளில்லாதவன் ஈயாமையை ஒருவரும் பழியார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Feb-18, 10:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே