விதியின் கட்டளை --- முஹம்மத் ஸர்பான்

காலத்தை நினைக்கிறேன்;
நிம்மதியை யாசிக்கிறேன்.
நெடுநேரம் தூங்குகிறேன்;
தயவு செய்து - என் அறைக்
கதவுகளைத் தட்டாதீர்கள்.
டையரியினுள் மனுக்கள்
சொட்டுச் சொட்டாய்
என்னுயிரை சிந்துகின்றது
நினைவுகளின் மீட்டல்கள்
கழுத்தை நெரிக்கின்றது
காற்றை போல் வந்தவள்
பூகம்பமாய் மாறினாள்
மழலை போல் சிரித்தவள்
என் ஆயுளை முடிவுக்கு
கொண்டு போய் விட்டாள்
போர்க்களமும் இல்லை;
பகைவர்களும் இல்லை;
ஆனால் - என்னை மட்டும்
துப்பாக்கிகள் சுடுகிறது
மார்புக்குள்ளும் வேதனை
கடிகாரத்தின் சுவாசத்தை
உள்வாங்கி நிறைகிறது
அவளுக்காய் எழுதப்பட்ட
என்னிதயத்தை - இன்று
அவளே தூக்கி வீசிவிட்டாள்
பட்டாம் பூச்சிகள் வாழ்ந்த
என்னிதயமும் - நாளை
கல்லறைப் பூச்சிகளுக்காக
தியாகம் செய்யப்படலாம்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (16-Feb-18, 10:16 am)
பார்வை : 293

மேலே