சொர்க்கம்

காமன் கணை எனை வதைக்க;
மாமன் நான் உனை அணைக்க;
தீரும் இரவு போதாது நமை இணைக்க;
யாகம் வளர்த்து உடல் தீ மூட்ட;
யோகம் வந்ததடி உனை மீட்ட;
மோகம் தீரவில்லை இப்போதும்;
வேகம் குறையாதடி எப்போதும்;
தாகமும் தீர்ந்ததடி பெண்ணே; இனி என்னொரு பாகமாய் ஆகிவிடு கண்ணே;போய்ச்
சேருமிடம் சொர்க்கம் அது என்றோ அல்ல;
உனை சேர்ந்த நாளான
இன்றேதானடி;
பாவத்தின் பலனாகும் நரகம் அது என்றோ அல்ல;
உனைப் பிரியும் தருணம்
ஆன இன்றேதானடி;
நாளும் உனை நான் காத்திருப்பேன்; ஊரில் நீ
தாழும் நிலை வாராது
பார்த்திருப்பேன்;
தாளும் பணிந்திடுவோம்
இறைவனையே;
நீளும் நல்வாழ்வு தந்திடுவான் ஆண்டவனே;
நீலம் கொண்ட வான் பறந்து
ஞாலம் போற்ற வாழ்வோம் சிறந்து★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (16-Feb-18, 9:09 am)
Tanglish : sorkkam
பார்வை : 316

மேலே