அவன் கவலை

மலர்கள் விற்கிறான் உதிரியாக
மாலை யாகிடும் உறுதியாக,
பலவகைப் பயன்கள் அதற்குண்டு
பள்ளியில் சோர்த்திடும் மணமாலை,
சிலையில் இறைவன் திருமாலை
சீரிலா அரசியல் பூமாலை,
நிலவிடும் அவனிடம் ஒருகவலை
நம்மிடம் வருமா மணமாலையே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Feb-18, 7:25 am)
பார்வை : 90

மேலே