காவிரி தீர்ப்பு

காவிரி வழக்கின்
பல தீர்ப்புகள்
கர்நாடக
குப்பை தொட்டியில்

புதிய குப்பையாய்
இன்றைய தீர்ப்பு

தீர்ப்பு வழங்கும்
நீதி அரசர்களுக்கு
மட்டும்

புரிவதே இல்லை
தம் தீர்ப்புகளை
கர்நாடக அரசு
குப்பையாய் கூட
மதிப்பதில்லை என்று

எப்பொழுதும் போல் நாங்கள்

அதே எதிர்பார்ப்போடும்
ஏமாற்றத்தோடும்



ந.சத்யா

எழுதியவர் : ந.சத்யா (16-Feb-18, 11:40 am)
Tanglish : kaaviri theerppu
பார்வை : 78

மேலே