காதல்

காதலிக்க காதலியைத் தேடி
தேடி நேரம் செலவழித்தேன்
காதலி கிடைத்தாள்- ஆனால்
காதலி கிடைத்த போதே
வேலையும் கிடைத்துவிட்டதே
இப்போது காதல் செய்ய நேரம் இல்லையே
யோசித்தேன் மணம் முடித்திடலாமென்று
பின்னர் அவள் மனைவி வேலையுடன்,நான்
கணவன் வேலையுடன் -இருவருக்கும்
இப்போது நேரமில்லையே காதலிக்க
காதலர் இப்படி இயந்திர மனிதர்களானோமே !
ஓடும் வாழ்க்கையில் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Feb-18, 11:28 am)
Tanglish : kaadhal
பார்வை : 84

மேலே