நட்பு

உயிர்த்தோழர்கள் அவ்விருவர்
ஒரு நாள் எங்கிருந்தோ வந்து
திடீரென தலையில் வீழ்ந்த இடி போல்
நண்பரின் ஒருவன் நோயால்
தாக்கப்பட்டான்-ஆய்வு, அவனுக்கு
சிறுநீரகக்கோளாறு கோளாறு -சிறுநீரக
மாற்று அறுவை சிகிச்சை அவசியம்
என்றது மருத்துவக் குழு அறிவிப்பு
அதைத்தொடர்ந்து ,

அவன் நண்பன் தன் சிறுநீரகம்
ஒன்றைத்தர சற்றும் யோசிக்காது இசைய
மீண்டும் மருத்துவர் ஆய்வுகள், இவன் சிறுநீரகம்
அவன் நண்பனுக்கு தானம் அளித்தால் சேரும்
இது மருவக்குழு அறிவிப்பு; அவன் நண்பன்,
நண்பன் வெகுவாய் மகிழ, அறுவை சிகிச்சை
முடிந்தது வெற்றியில் , உயிர் மீண்டான் நண்பன்;
நண்பர்கள் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சி
தானத்தால் இன்னும் உயர்ந்தான் ஒரு நண்பன்
ஈருடல் ஓருயிராய் வாழும் நண்பர்கள் !
நட்பில் சிறந்தது வேறேது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-Feb-18, 2:00 am)
Tanglish : natpu
பார்வை : 980

மேலே