அமெரிக்காவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட குறை வயது கல்யாணங்கள்

தன் பதினொன்றாம் வயதில் ஷெரி ஜான்ஸன் என்பவர் வன்கொடுமைக்கு உள்ளானார். அதனால் கருவுற்றார். அதன் பின் தன்னை வல்லுறவு செய்தவனுக்கே மணம் முடித்து வைக்கப்பட்டார். இந்தப் பழக்கத்தை மாற்ற இப்போது தன் கதையை சொல்லி போராடி வருகிறார் ஷெரி ஜான்ஸன். அமெரிக்காவில் எந்த வயதில் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். இப்போதுதான் ஃப்ளோரிடா அதை மாற்ற முனைந்திருக்கிறது. திருமணத்திற்கு குறைந்தபட்சம் 18 வயதாக வேண்டும் என்பதை சட்டமாக்கப் போகிறது.

நியு ஜெர்சி கவர்னராக இருந்த கிறிஸ் கிரிஸ்டி முன் இந்த மசோதா வந்தபோது மத நம்பிக்கைகளுக்கும் கிறித்துவ பாரம்பரியத்திற்கும் இந்த சட்டம் ஊறு விளைவிக்கும் எனச் சொல்லி அந்த சட்டமுன்வரைவை நிராகரித்து விட்டார். கடந்த பதினைந்து ஆண்டுகளில் மட்டும் பால்ய விவாகமாக 2,07,468 குழந்தைகளுக்கிடையே திருமணம் நடந்துள்ளதாக பதிவாகி உள்ளது.

எழுதியவர் : (20-Feb-18, 5:46 pm)
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே