படித்ததில் பிடித்தது

சஹாராவில் இருந்து அமெரிக்காவிற்கு
ஹாலாஸ்யன்

ஆப்ரிக்கப் புழுதிக்கும் அமெரிக்கச் செழிப்புக்கும் என்ன சம்பந்தம். நிறைய இருக்கிறது. வடக்கு ஆப்ரிக்காவின் மூன்றில் ஒரு பகுதியை அடைத்திருக்கும் சகாரா பாலைவனம் முழுக்கக் கொட்டிக் கிடப்பது மண். அந்தப் பாலைவனம் ஒரு காலத்தில் மழை தொடர்ச்சியாகப் பொழியும் பகுதியாக இருந்தது. ஒரு காலம் என்றால் உடனே மில்லியன் கணக்கில் எல்லாம் எண்ணாதீர்கள். ஆராய்ச்சிகள் 6000 வருடத்திற்கு முன்னர்தான் சகாரா முழு பாலைவனமாக ஆனதாகச் சொல்கிறார்கள். ஆனால் செத்தும் கொடுத்த சீதக்காதி கதையாய் அது அட்லாண்டிக் தாண்டி அமெரிக்காவிற்கு கொட்டிக் கொடுக்கிறது.
அனுபவம், இசை, குழந்தை வளர்ப்பு »
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 6
அஸ்வத்

இசைவாணருக்கும் பெரிய இசை வாணருக்கும் ஒப்புமை நோக்கும் போது பெரிய இசைவாணரை இன்னமும் சாத்வீகமானவர் என்று தான் சொல்ல வேண்டும். மழலை மேதை என்று அறியப் பட்டிருந்ததாலோ என்னவோ இசைவாணரிடம் இருந்த வித்தை போதாமை உணர்வு இவரிடம் கிடையாது. பெரிய சங்கீத விற்பன்னர் என்றும், வாக்கேயக்காரர் என்றும் அறியப்படுபவர் ஆதலால் தன் வித்தையைப் பற்றிய தன்னம்பிக்கையின்மையோ தாழ்வு மனப்பான்மையோ இவரிடம் கிடையாது என்பதே உண்மை. ஆரம்ப நாட்களில் இவர் ஆதித்யாவைத் தன் பிள்ளை போலவே நடத்தி வந்தார்.
அனுபவம், இசை, குழந்தை வளர்ப்பு »
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 5
அஸ்வத்

என் எண்ணம் என்னவாக இருந்ததென்றால் அவனுடைய திறமையின் மேன்மை எப்படியாவது உலகம் அறியும் படிச் செய்து விட்டால் அவன் நடத்தையின் விநோதங்களை உலகம் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகிக் கொள்ளும் என்று நம்பினேன். புல்லாங்குழல் கலைஞர் டி ஆர் மகாலிங்கம் விஷயத்தில் உலகம் முதலில் அவர் வாசிப்பில் இருந்த மேன்மையை அங்கீகரித்தது. பின்னர் தான் அவர் குணாதிசயங்களில் இருந்த விநோதங்களை உள் வாங்கிக் கொண்டது. அப்போதெல்லாம் அவர் மேதைமையின் காரணமாக உலகம் அவர் குணாதிசயக் கூறுகளை சகிக்கக் கற்றுக்கொண்டது. இதே போல் ஆதித்யா விஷயத்திலும் நடந்தால் தேவலை என்று நான் நினைத்தேன். இதில் இன்னொரு விஷயமும் அடங்கி இருந்தது. அவன் பாடல்களைக் கேட்டுக் கேட்டு தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி வருகிறான். இதைப் போய் நான்கு சுவர் உள்ள ஒரு கட்டுமானத்தில் போட்டோம் என்றால் இதனால் அவன் இயற்கையான இசை மேதைமை அதில் தீய்ந்து விட்டால் என்ன செய்வது?
அனுபவம், உளவியல், குளக்கரை- குறிப்புகள் »
குளக்கரை
பதிப்புக் குழு

நம் உடலை சற்றே உற்று கவனித்தாலே தெரியும், அது எத்தனையோ ஆச்சரியங்களை இயற்கை என்ற பெயரில் பொதித்து வைத்திருக்கிறது என்று. ஓர் ஆரோக்கியரின் ரத்தத்தில், சோடியத்தின் அளவு ஓர் லிட்டருக்கு 135லிருந்து 145 milliequivalents (mEq/L). இந்த அளவுகளிலிருந்து சற்றே மீறினாலும் உடல் சீர்கேட்டிற்கு கொண்டு செல்லும். அவ்வாறு செல்ல விடாமல் உயிரினங்கள் உடல், தன்னளவிலேயே சம நிலைக்கு கொண்டு வந்துவிடும். இத்தனை கட்டுக்கோப்பாக உயிரனங்களின் உடல் சுயமாக சமநிலை பேணுவதை மருத்துவ துறையில் homeostasis என்ற சொற்றொடரில் குறிக்கப்படுகிறது. தன் தகப்பனார் உடல் நிலை சரியில்லை என அறிந்தவுடன் சித்தார்த் முகர்ஜி அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு விரைவதில் தொடங்குகிறது, இந்தக் கட்டுரை.
அனுபவம், இசை, குழந்தை வளர்ப்பு »
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 4
அஸ்வத்

‘மூதுரை, நன்னெறி, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்’ போதாதென்று ஆளாளுக்குத் தயார் செய்து வரும் அறிவுரைகள் கொட்டிக் கிடக்கின்றன நம் நாட்டில். யாராவது அடுத்தவன் நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து அதைப் பரிவுடன் சொல்கிறார்களா என்றால் அது சொற்பமே. ஜெயகாந்தன் சொல்வாரே ‘சஹ்ருதயர்கள்’ என்று அது போன்ற சஹ்ருதயர்கள் உலகில் சொற்பமே என்று தோன்றுகிறது. குறிப்பாக ஒரு மனிதன் கஷ்டத்தில் இருக்கிறான் என்று அடுத்தவன் உணரும் போது எதையாவது தெளித்து விட்டு ஓடத்தான் நினைக்கிறானே ஒழிய, அதில் பங்கெடுப்போம் என்று முனைவோர் நிறைய பேர் கிடையாது.
அவரவர்க்கு அவரவர் கவலை. அவ்வளவுதான் பொருளாதார சமூக சூழல் காரணிகளும் காரணம். மற்றவர் படும் அவதிகளை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நகர்ந்து விடுகிறது. இதற்கு நானும் விதிவிலக்கன்று.
கணினித் துறை, தகவல் அறிவியல், தொழில்நுட்பம் »
சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊன்
பாஸ்டன் பாலா

சொக்குப் பொடி போட்டு கணித்திரை சிறைக்குள் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றன; ஒரேவிதமான தகவல்களைக் கொடுத்து பொய்களைக்கூட நிஜமென்று நம்ப வைக்கின்றன; நம்மிடையே பிரிவினையை உருவாக்கி, பிழையான சங்கதிகளின் மூலம் வெறுப்பை உருவாக்குகின்றன; வெறும் இதழியல் செய்தித்தாள் அமைப்பை மட்டும், கபளீகரம் செய்தது என்றில்லாமல், தனிமனிதரின் அந்தரங்கம், சுதந்திரம், குடும்பத்தின் நான்கு சுவருக்குள் நடக்கும் பிக்கல்/பிடுங்கல் போன்றவற்றையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன; அரசியலில் மூக்கை நுழைத்து சுதந்திர தேசங்களின் அதிபர் தேர்தல்களில் தகிடுதத்தம் நடக்க வைக்கின்றன; எந்நேரமும் கைபேசிகளின் கறுப்புத் திரையினைப் பார்க்க வைத்து வேறெதிலும் கவனம் செலுத்தவிடாமல் திறன்பேசிகளின் தாசானுதாசர் ஆக்கி வைக்கின்றன…
அனுபவம், இசை, குழந்தை வளர்ப்பு »
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 3
அஸ்வத்

“எங்க குடும்பமே இசைக் குடும்பம் தான். நாங்க எல்லோரும் ‘ப்ராடிஜீஸ்’. ஆனா இவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வரதுக்கு எவ்வளவு பாடுபட்டிருக்கேன் தெரியுமா? என் கம்பெனியோட டர்ன் ஓவர் இப்போ ஃபைவ் க்ரோர்ஸ். நான் ஆரம்ப நாள்ல அவ்வளவு கஷ்டப் பட்டேன். அப்ப ஒரு முடிவு பண்ணேன். இந்த மாதிரி டாலண்ட் உள்ள பசங்களுக்குத் தான் முன்னுரிமை. இங்க டாலண்ட் ப்ரமோஷன்னு ஒரு ப்ரோக்கிராம் இருக்கு. உங்க பையனைப் பொறுத்த மட்டில ஆரம்பப் பாடம்லாம் தேவையில்லை. அந்தப் ப்ரோக்ராம்ல போட்டுடுங்கோ. பத்தாயிரம் ரூபா. பீஸைக் கட்டிடுங்கோ” என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.

“பையன் இன்னும் வளரலியே சார். இன்னும் கொஞ்சம் மெச்சூரிடி இருந்தாத் தேவலயில்லையா. . . . . . ” என்று நான் இழுத்தேன்.

“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. சங்கீதத்திலேயே மூழ்கியிருக்கறவா அப்படித்தானிருப்பா. அவன் வயசுக்குத் தேவையான மெச்சூரிடி நிறைய இருக்கு. மத்ததெல்லாம் தானா வந்துரும் என்றார்.
உளவியல், கட்டுரை, சொற்கள் »
தானோட்டிக்கார்கள் – முடிவுரை
ரவி நடராஜன்

எந்திரக் கற்றலியலில், மிகவும் ஆராயப்பட்டுவரும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை (unsupervised learning algorithm) reinforced learning என்பது. இந்த நெறிமுறை, எதையும் சொல்லிக் கொடுக்காமல், ஒரு எந்திரத்தைத் தானாகவே கற்றுக் கொள்ளவைக்கும் மேற்பார்வையற்ற ஒரு நெறிமுறை. இந்த நெறிமுறையில் உள்ள முக்கிய அம்சம், அதிக முயற்சிக்கு அதிக பரிசு என்பதாகும். அதிகமாக பொருட்களை விற்கும் விற்பனையாளருக்கு அதிக கமிஷன் கொடுப்பதைப் போன்ற விஷயம் இது. விடியோ விளையாட்டிற்குச் சரிப்பட்டுவரும் இந்த நெறிமுறை தானோட்டிக்காருக்குச் சரிப்பட்டுவருமா? அம்மா கட்டுப்பாடற்ற சிறுவனைப்போல, கார் இயங்கத் தொடங்கிவிடுமா? இதை Mobileye காரர்கள் சோதனை செய்து பார்த்தார்கள்.
உளவியல், குழந்தை வளர்ப்பு »
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 2
அஸ்வத்

அந்த மருத்துவரை என்னால் மறக்க முடியவில்லை – ‘டெட்டி பேர்’ போன்றதொரு உருவத்துடன் தடிமனான கண்ணாடி அணிந்து ‘பிரஸன்ன வதனம்’ என்பார்களே அதுபோல் சிரித்துக் கொண்டேயிருந்தார். கண்களும் சிரித்துக் கொண்டேயிருந்தன. உறவினர் அவருடன் ஏற்கனவே தொலைபேசியில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும் போது பையனைப் பற்றி விவரித்திருப்பார் போலிருக்கிறது. அவர் நேரடியாகப் பையனிடம் “நான் கேக்கறதுக்கு நீ பதில் சொன்னேன்னா நான் உனக்கு சாக்லேட் தருவேன்” என்றார்.

பையன் அவர் மேஜையில் இருக்கும் சாமான்களில் எதை எடுத்து உடைக்கலாம் என்பதுபோல் தொட்டுத் தொட்டு ஆராய்ந்து கொண்டிருந்தான். அவர் வற்புறுத்திக் கேட்கும் ஒன்றிரண்டு கேள்விகளுக்கு பதில் சொன்னான். சிரித்துக் கொண்டே இந்த அவர்

“தேர் இஸ் நத்திங் ராங் வித் த சைல்ட்” என்றார் சிரித்துக் கொண்டே.

உறவினர் விடாமல் “பையனுக்கு ‘ஆட்டிஸம்’ இருக்கோல்யோ?” என்றார்.

டாக்டர் சிரித்துக் கொண்டே, நான்தான் சொன்னேனே “தேர் இஸ் நத்திங் ராங் – ஹி இஸ் நாட் ஆட்டிஸ்டிக், ஹி இஸ் ஒன்லி ஆர்ட்டிஸ்டிக்,” என்றார் தீர்மானமாக
அறிவியல், உடல் நலவியல், மருத்துவம் »
வாழ்வின் இறுதிக் காலங்களில் பிறரைச் சார்ந்திருத்தல்
கடலூர் வாசு

முதியோர்களின் எண்ணிக்கை இவ்வாறு கூடிக்கொண்டே போவது தொடர்ந்தால் இதனுடைய விளைவுகள் இம்முதியோரைப் பேணும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நவீன சமுதாயத்தில் முதியோர்களிடையே விவாகரத்தும், வெவ்வேறு இடங்களில் வசிக்கும் குடும்பத்தினரும், வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போவதால் இவர்களைச் சிறிதளவே சார்ந்திருக்கும் முதியோர்களின் நிலைமை எல்லா நாடுகளிலுமே கடினமாகி வருகிறது….உறவினரல்லாத, பண வசதியற்ற முதியோர்களின் நிலை மிகவும் கடினமான ஒன்று என்பது மட்டுமல்லாமல் சமுதாய சமத்துவமின்மைக்கு முக்கிய மேற்கோளாகவுமாகிறது. அதே சமயம், முதியோரைப் பேணிக் காக்கும் குடும்பத்தினரின் பொருளாதார நிலைமை பாதிக்கப்படும் வாய்ப்புமுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
உலக சினிமா, திரைப்படம், ஹாலிவுட் அறிவியல் »
கரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்
பாஸ்டன் பாலா

படத்தின் நாயகன் “கே” ஒரு நகலர் பொம்மையை தன் வீட்டில் வைத்திருக்கிறான். அந்த பொம்மையின் பெயர் “மகிழ்ச்சி” (Joi). அது “கே” என்ன விரும்புகிறானோ அந்த ஆடையை அணிகிறது. “கே” செத்தால் தானும் உடனே மரிக்க நினைக்கிறது. “கே” என்னும் நகலனை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறது. “கே” என்ன நினைக்கிறானோ, அதை அப்படியே கிளிப்பிள்ளை போல் திரும்பி உறுதி செய்து அவன் முன்மொழிந்த எண்ணங்களை மறுமொழிகிறது. இது அத்தனையையும் சொந்தமாக சிந்தித்து நிதானமாக யோசித்து தன்னுள்ளே விவாதித்த பின் தீர்மானித்தது போல் நம்பகமாக “கே”யின் முடிவுகளை ஆதரித்து அவனை குஷியாக்குகிறது. கடையில் இந்த “மகிழ்ச்சி”யை “காதல்” கொன்றுவிடுகிறது.
அறிவியல், வானிலை ஆய்வியல், வீடியோ »
அடிமுடி ஒன்றில்லாத பேரண்டம்
பதிப்புக் குழு
பிரபஞ்சம் முடிவிலியா? அல்லது அதன் வரம்புகளை அறிவியல்பூர்வமாக வரையறுத்துவிட்டோமா? நாம் இருக்கும் இடத்தில் இருந்து 46 பில்லியன் ஒளி வருடங்களைப் பார்க்க இயலுகிறது. ஆனால், இப்போதைக்கு நம்மால் இவ்வளவுதான் அளவிட முடிகிறது.
நம் அகிலத்தை அளந்து முடித்து விட்டோமா? அண்டம் என்பது முடிவே இல்லாததா? ஈதன் விடை காண அளவளாவுகிறார்
உடல் நலவியல், குளக்கரை- குறிப்புகள், சமூகம் »
குளக்கரை
பதிப்புக் குழு

தமிழ்த் திரைப்படத்தில் வரும் பாலியல் வன்முறைக் காட்சிக்குப் பின், ஒரு பஞ்சாயத்து கூடும். அதில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்ணை அதை நிகழ்த்தியவன் மணம் செய்துகொள்ள வேண்டும் என்ற (வழக்கமான) விசித்திரமான தீர்ப்புக் கூறப்படும். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு தீர்ப்பை அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகண நீதிமன்றம் அளித்துள்ளது. பாலியல் வன்முறை மூலம் பிறந்த ஒரு குழந்தையை அதன் தாயோடு, அந்த வன்முறையை நிகழ்த்தி அவளைக் குழந்தைக்குத் தந்தையாக்கியவனும் பராமரிக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. இது தவறான தீர்ப்பு என்றும், தனது கட்சிக்காரரை இரண்டாவது முறையாக சட்டம் தண்டித்துள்ளது என்றும் அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.
இயற்பியல், வானியல், வானிலை ஆய்வியல் »
கருங்குயில் கீதம், ககன வெளி நடனம்
பானுமதி.ந

ஒன்றை நோக்கி ஒன்று செல்கையில் அவற்றின் தீவிரம், அவை வெளிப்படுத்தும் ஆற்றல், இயற்பியலுக்கு (Physics), அதிலும் முக்கியமாக தூலத்தைக் கடந்ததின் (Metaphysics) ஒரு பகுதியான பேரண்டத்தின் பிறப்பை அறிய ஒரு வழி. மொத்தமான எடையில், அதாவது, ஆதவனைப் போல சுமார் 29 மடங்கு மற்றும் 36 மடங்கு எடை கொண்ட அவை, ஒரே கருந்துளையாக இணைந்து ஆதவனைப் போல் 62 மடங்கு எடையாகி 3 மடங்கு ஈர்ப்பு அலைகள் கொண்டு மிகுந்தன. காலவெளியில் ஈர்ப்பு அலைகள் என்பவை ஒலி அலைகள் அல்ல; அவை நடுக்கங்கள்-நில நடுக்கங்களைப் போல் ஓரிடத்திலிருந்து வேறிடம் கடக்கும் போது மெலிதாகி விடுகின்றன.

எழுதியவர் : (20-Feb-18, 6:09 pm)
பார்வை : 156

சிறந்த கட்டுரைகள்

மேலே