என்னவளின் காதல்
காதல் என்னும் பூந்தோட்டத்திற்கு உன்னை அழைக்க
நட்பு என்னும் அலங்காரம் சூடியே வந்தாய்!
நான் காதலை உணர வைக்க நினைக்கும்போதெல்லாம்
நட்பின் ஆழம் உணர செய்தாய்!
நட்பிற்கு இலக்கணம் என்றாய்!
மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்!
காலம் கடந்தது
நட்பில் காதல் கலந்தது!
நாட்கள் சுகமானது!
காதலில் காணாத இன்னல்கள் அனைத்தும்
கரம் பிடிக்க நினைக்கும் இந்த தருணத்தில் காண்கிறேன்!
எத்தனை போராட்டம்!
அத்தனையும் தாண்டி வருவாய் என் கரம் பிடிப்பாய்
என்ற உன் வார்த்தை மட்டும் இன்று துணையாய் !