காபரே நடன மாது

அந்த ஐந்து நட்சத்திர ஓட்டல்
நுழைவாசல் வந்தடைந்தேன்
நுழைந்தவுடன் இருபுறமும்
பூக்கள் தாங்கிய பூந்தொட்டிகள்
இரவு ஆரம்ப நேரமது
இரவுராணி மல்லிகைப்பூ
தன எழிலில் நறுமணத்தில்
என் மனதை பெரிதே கவர்ந்தது


இதோ இப்போது நான் ஓட்டல் உள்ளே
இரவு பிரமுகர் விருந்தில் கலந்துகொள்ள
நுழைகிறேன் , இதோ என்னை வரவேற்று
எனக்கென ஒதுக்கிய மேஜைக்கு
அழைத்துச்செல்கிறார் ஓட்டல் சிப்பந்தி
அமர்ந்தபின் சுற்றுமுற்றும் பார்த்தேன்
அங்கு தெரிந்தது ஓர் நடன அரங்கம்
இன்றிரவு அங்கு ஒரு காபரே நடன விருந்து
என்றறிந்தேன்..............இப்போது மணி ௮ இரவு
அறைமுழுவதும் கூட்டம்- முக்கிய பிரமுகர்
வந்ததுமே 'டின்னர் துவக்கம் - முதலில்
வித விதமாய் மது வகைகள் வந்து போயின
வேண்டியவர் விரும்பி அருந்த .......இப்போது
வித விதமாய் வைத்திருந்த உணவு மேஜைகளை
நோக்கி வந்தவர் கூட்டம் மொய்க்க,
திடீரென, வெளிச்சம் அறையில் மங்க,
'காபரே' அரங்கு திறந்துகொண்டது
எங்கிருந்தோ இசைமழை அறையை நிறப்ப
அரங்கின் நடுவே வந்து நின்றாள் அந்த
'நடன சுந்தரி'............'ட்விஸ்ட்', 'பிரேக் 'என்று
ஏதேதோ வித வித நடனங்கள் ................
இப்போது மணி இரவு பன்னிரண்டு.........
அரங்கத்தில் திடீரென மயான அமைதி
அசுரவேகத்தில் சென்ற இசையும் நின்றது
விளக்கெலாம் அணணிந்திட இருள் கவ்விய
அரங்கம் ........... அப்போது எங்கிருந்தோ
அரங்கை நோக்கி 'ஒளி கற்றைகள்' அந்த
நடன மாதின் மேல்........இப்போது அவள்
,சுற்றி-டீஸ் ' ஆடிக்கொண்டிருக்க, ஒரு நொடியில்
உடையே இல்லாதது போல் விளக்கின் ஒளி
ஜாலத்தில் மக்கள் விழி பிதுங்க பார்வை.......
நடனம் முடிந்தது ..............மேடையில் திரை..
நடனமாது இப்போது 'தன அறையில்'பாவம்
ஒரு இருக்கையில் தொப்பென்று வந்து
வீழ்ந்தாள்.........விக்கி விக்கி அழுகை மெல்ல
வந்திட.............தன் விதியை எண்ணி அவள்
அழுகை.........வேறு வழி இல்லாது ஓடும் வாழ்க்கை
அவளையே நம்பி இருக்கும் குடும்பம்...........


எல்லாம் முடிந்து இப்போது நான் ஓட்டல் வெளியே
மணி அதிகாலை வேளை !!!!!!

நான் இரவில் கண்ட 'இரவுராணி மல்லி'
பொலிவிழந்து வாடி நின்றது தொட்டியில்
இப்போது வாசமும் அங்கு இல்லை
எத்தனை 'குறுகிய வாழ்வு' அப்பூவின் வாழ்வு

பாவம் 'மேடை கேபரேட் நடன மாது'
இந்த ' இரவு ராணி மல்லிகைப்பூ'போல்
அவள் வாழ்க்கை .............என்று
எனக்கு தோன்றியது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Feb-18, 8:32 am)
பார்வை : 73

மேலே