தெளிவது எப்போ

வட்டி போட்ட குட்டி கூட வான நோக்கி வளருது !
வாடி போன மூஞ்சி எல்லாம் வாட்டர் தேடி ஓடுது.....!
வளமான வாழ்க்கையின்னு வாய் கிழிய பேசுது.... !
வரும் தேர்தலையும் மனசில் வச்சி வாங்கி வாங்கி ஊத்துது ...!

செத்தவனும் எழுந்து வந்து ஒட்டு போட்டு போகிறான் !
சேர்த்தவனோ காச எறைச்சி செங்கோட்டையையே புடிக்கறான் ...!
சேர்ந்த கூட்டம் அத்தனையும் செருப்பு மணலாய் உதறுறான் !
சோத்துக்கும் வழியின்றி சொரணைக்கெட்டு நிக்கறான்.....

நல்லவன்னு நடிக்கறான் ! நரிவேஷம் போடறான் !
நன்மை செய்ய போரேன்னு ; நடு வீதியில் கூவுறான் !
போதை தெளிஞ்சி பாரு ! அங்கே கூவுவது யாரு !
வட்டி வாசல் அடைப்பதற்கு வழிஇருக்கா பாரு !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (22-Feb-18, 12:12 pm)
பார்வை : 216

மேலே