பிரியாவிடை கவிதை

செடிகளை புன்னகை செய்ய வைத்து விட்டு
பூக்களை மட்டும் பிரித்து அழ வைத்த நாள்.
மலர்களுக்கு மணம் கொடுத்து விட்டு ,
மனதை மட்டும் பிரிவெனும் முட்களால் குத்துவது ஏனோ.
ஒற்றுமை என்னும் வெளிச்சத்தை ஏற்றி விட்டு
திக்ககற்ற இருளில் பிரிய வைத்தது தகுமோ.
பள்ளியில் நாம் புதிதாய் ஜனனமானோம்,
பண்புகளில் நாம் ஒன்றானோம்.
பிரிவோம் என்று தெரிந்துதான் நாம் சந்தித்தோம்,
சந்தித்த பின்புதான் பிரிவின் வலியை சிந்தித்தோம்.
பிரிவுகள் நிரந்தரமல்ல என்பதை மீண்டும் சந்திக்கும் போது உண்மை படுத்துவோம்.
முட்களாய் சில வார்த்தைகள் நம்மை காயபடுத்தி இருந்தாலும்,
நம் நட்பின் நினைவுகள் பசுமையான இலைகளை ஞாபகபடுத்துகிறது.
நம் முகவரியை பறிமாறி கொண்டு
நட்பின் முகவரியை மறந்து விடாதீர்கள்.
நாம் எல்லோரும் பூக்கள் போலத்தான்,
வண்ணங்களிலும் வாசனைகளிலும் வேறுபட்டாலும்.
நாம் வாழ்வது ஒரே பூந்தோட்டத்தில்தான்.
அங்கு மழைகளோ வெயில்களோ வேற்றுமை பார்பதில்லை,
மீண்டும் சந்திபோம் ஒரு மலர் மாலையிலோ அல்லது ஒரு மலர் வளையத்திலோ...