பெட்டகத்தில் பூக்கள்

எண்ணங்கள் யாவும்
சிக்குண்டு கிடக்கின்றன
வரிகள் கிடைக்கவில்லை..
வலிகளை உமிழ்ந்து
தள்ளிடும் வாழ்க்கை!
வானவில்லில் கூட
ஒரே நிறம் கருமையாய்...
அஞ்ஞானம் பேரிருளை
கொணர்ந்து வந்து
அமிழ்த்துகிறது...
யதார்த்த செக்கில் சிக்கி
மகிழ்வுகள்
சிதைந்து போகின்றன...
பரிதியின் விழியசைவில்
இருள் விலகிப்போகும்
என்ன?
என்னுடையது
சற்றே நீண்ட இரவு..
என் ஆசைகள்
கசங்கிடா வண்ணம்
பத்திரமாய் பூட்டி வைக்கின்றேன்..
தொலைவினில் இல்லை
நான்
தொடப்போகும் என் வானம்!

எழுதியவர் : சுரேஷ் குமார் (23-Feb-18, 10:45 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
பார்வை : 92

மேலே