நண்பன்-நட்பு-நட்பு பலா

நல்ல நண்பனின் நட்பு
பலாக்கனி போன்றது
நண்பனவன் உன் குறைகளை
தவறாது தயங்காது உன்முன்னே
வைப்பான், நீ தவறு செய்தால்
நீ அவனை வெறுத்துநின்றாலும்
உன்னை திருத்துவான் அவன்
வெளியிலே அவன் சுபாவம் முரடு
பாலாவின் முள்போல் குத்தும்
வெளித்தோல் போல , பலாவின்
தோலை நீக்க உள்ளே இனிக்கும்
அறுசுவைக் கனி சுளைகள்
நண்பன் அவன் உள் மனதுபோலே
அது நட்பின் பாங்கை நீ அறிந்துகொண்டால்
குன்றா சுவைத்தரும் நட்பு பலா.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Feb-18, 8:54 am)
பார்வை : 485

சிறந்த கவிதைகள்

மேலே