தேவி ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி... சினிமாக்களில்
காதலன் கசிந்துருக நீ
நடிக்கும் நளினம் கண்டு
காலன் உன்னை
அழைத்துக் கொண்டானோ...

சிவகாசியில் பிறந்தாய்...
வர்ணப் பட்டாசுகளாய்
திரைவானில் ஜொலித்தாய்..
வயதான தோற்றத்தை
ரசிகர்கள் காணவேண்டாம்
என்பதற்காகவே அழகாய்
உன் ஐம்பத்து நாலில்
மறைந்து போனாயோ...

தமிழ் தெலுங்கு
மலையாளம் கன்னட
மொழிப் படங்களில்
நடித்ததால் நீ தென்னிந்தியத்
திரை உலகையும்
ஹிந்தி படங்களில் நடித்ததால்
இந்தியத் திரை உலகையும்
ஆண்ட அழகுராணி நீ...

எல்லா இந்தியருக்கும்
நல்லாத் தெரிந்த மயிலே
நீ ஏன் பறந்து போனாய்
ஆண்டுகள் பல
பாக்கி இருக்க...

பிறந்த முதல் நான்கு
ஆண்டுகள் தவிர
மீதம் ஐம்பது ஆண்டுகள்
லட்சங்களில் கோடிகளில்
சம்பாதித்தவள் நீ
மட்டுமாகத்தான் இருக்கும்...

உன்னை நாங்களறிவோம்...
எம்மை நீயறியாய்..
பிரதமர் ஜனாதிபதி
மாநில முதல்வர்கள்
உட்பட தலைவர்கள்
ரசிகர்கள் என
கோடானுகோடி மனிதர்கள்
உன் மறைவுக்கு அஞ்சலி
செலுத்தும் புகழ்பெற்றவள்
என்பதையாவது நீ
அறிந்திருந்தாயா...

தமிழிலிருந்து இந்தி
சென்றதில் வருந்தியது
மனது அன்று...
உலகத்து நாடுகள்
ஒவ்வொன்றிலும்
இந்திய இதயங்கள்
இன்று கண்ணீர்
சிந்த வைத்த உன்
மறைவில் தெரிகிறது
தமிழ்ப்பெண்ணொருத்தி
மறைந்தாளென்று...
நீ மறைந்த பெரிய
சோகத்திலும் அர்த்தம்
ஒன்று தெரிகிறது இன்று...

இந்தியாவில் வாழ்ந்த
காலம் முழுமைக்கும்
உயிரோட்டமாய் இருந்தாய் நீ
எனும் தேசப்பற்றில்
வெளிநாட்டில் மறைந்து
போனாயோ...

உன் மழலை அழகில்
உறவினர்கள் மயங்கினர்..
உன் தோற்ற அழகில்
உலகம் மயங்கியது...
உள்ள அழகில்
போனிக் கபூர் மயங்கினார்...
உன் நடிப்பு நடன அழகில்
ரசிகர்கள் மயங்கினர்...
மயங்கி நீ உயிர் மறைந்ததில்
மக்கள் வருந்துகின்றனர் இன்று
யாரோ போய்விட்டார்
என்றல்ல... நம்மிலொருவர்
நமைப்பிரிந்தார் என்று...

எம்ஜிஆர் சிவாஜி
கமல் ரஜினி
சிவகுமார் நாகார்ஜுனா
அமிதாப் ஜிதேந்திரா
தர்மேந்திரா ராஜேஷ்கன்னா
மிதுன்சக்ரவர்த்தி அனில்கபூர்
இன்னும் நிறைய
புகழின் உச்சி அடைந்தவர்களோடு
பயணித்தவளே... வாழ
இன்னும் என்ன இருக்கிறது
என நினைத்தாயோ...
கோடிக்கணக்கில் உன்
மறைவில் துயருற
இதயங்கள் இங்கு
உண்டென்பதை மறந்தாயோ...

செந்தூரப்பூவே
ஜில்லென்ற காற்றே...
மழைக்கால மேகம்
ஒன்று மடி ஊஞ்சலாடியது..
என் வானிலே
ஒரே வெண்ணிலா...
இவை எப்போதோ அல்ல
எப்போதும் எனக்கு
வந்துபோகும் பாடல்கள்..

உந்தன் விழிமலர்களால்
திரைப்படங்களில் நீ எழுதிய
காதல் கவிதைகள்
காதல் தெரியாதவர்க்கும்
காதல் சொல்லித் தரும்...

காதலால் கால்விரலால்
நிலத்தில் கோலம் போட்டு
நீ நடித்த நடிப்பெல்லாம்
நடனங்களில் நீ காட்டிய
அபிநயங்களையும் விட
அழகாய் நினைவில்
வந்து போகிறதே...
சோகவியலில் கண்மூடி
நடித்த பேரழகே...
வாழ்வியலில் மண்மூடச்
செல்கிறாயே... நியாயந்தானா...

ஆறுதல் ஒன்று உண்டு...
எல்லோரும் சென்றடையும்
இடம்தான் நீயும்
செல்கிறாய் என்பதால்...
நல்ல மகளாய் நல்ல தாயாய்
நல்லதொரு நடிகையாய்
வாழ்ந்து மறையும் நீ
சினிமாக்களில் வாழ்கிறாய்...

நினைத்த போதெல்லாம்
உன்னை உன் நடிப்பை
உன் நடனத்தைப் பார்க்க
நீ நடித்த சினிமாக்கள்
அனைத்தும் எங்களுக்கானது...
ஆறுதல் அதிலிருக்கிறது...

நீ மட்டுமா அழகு... உன்
நினைவுகள் கூட அழகு..

உன் ஆன்மா அமைதி கொள்ளட்டும்..

ஆழ்ந்த அனுதாபங்களுடன்...
ஆர். சுந்தரராஜன்.
😢😭

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (26-Feb-18, 5:42 am)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 238

சிறந்த கவிதைகள்

மேலே